search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் ராதாரவி"

    • சினிமாத்துறையில் குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் உள்ளது.
    • பெரிய படங்களை வாங்க ஆட்கள் இல்லை. தயாரிப்பாளர்களுக்கு பணம் கிடைக்க வேண்டிஉள்ளது.

    பழனி:

    பழனி மலைக்கோவிலுக்கு நடிகர் ராதாரவி சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவருடன் பக்தர்கள் ஆர்வமுடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். முகூர்த்த நாள் என்பதால் திருமணம் செய்து கொண்ட பக்தர்களும் நடிகர் ராதாரவியுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மணமக்களுக்கு ராதாரவி அன்பளிப்பு வழங்கினார்.

    அதன்பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

    சிதம்பரம் கோவிலில் வரவு-செலவுகள் அரசால் செய்யப்படுபவை அல்ல. நூற்றாண்டுகால பழக்கவழக்கங்களை மாற்ற தி.மு.க அரசு முயற்சிக்கிறது. இது தவறான முன்உதராணத்தை ஏற்படுத்திவிடும். தி.மு.க ஆட்சியில் ஓராண்டு பல சாதனைகளை செய்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் எந்தவித சலுகையும் மக்களுக்கு கிடைக்கவில்லை.

    சினிமாத்துறையில் குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் உள்ளது. பெரிய படங்களை வாங்க ஆட்கள் இல்லை. தயாரிப்பாளர்களுக்கு பணம் கிடைக்க வேண்டிஉள்ளது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு மீது அவர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    நான் அவரை தொடர்ந்து பின்பற்றி வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #RadhaRavi #MKStalin #DMK
    சென்னை:

    கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



    இதனையடுத்து அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டார். அவர் தனது அறிக்கையில், நடிகர் ராதாரவி கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக கூறியிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார். #RadhaRavi #MKStalin #DMK
    ×